இலங்கை

வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!

Published

on

Loading

வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!

பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு 

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Advertisement

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரித்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுபச்செய்தியை வெளியிடுகின்றேன். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது – என்றார். முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version