இலங்கை
வவுனியாவில் விபத்து; மூவருக்குப் படுகாயம்!
வவுனியாவில் விபத்து; மூவருக்குப் படுகாயம்!
வவுனியா – மன்னார் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒரு பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.