உலகம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு சலுகை வழங்கும் ஹாங்கொங் பல்கலைக்கழகம்!

Published

on

வெளிநாட்டு மாணவர்களுக்கு சலுகை வழங்கும் ஹாங்கொங் பல்கலைக்கழகம்!

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ள நிலையில், அங்கு கல்விகட்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிபந்தனையற்ற சலுகைகளை வழங்குவதாக, ஹாங்கொங்கில் உள்ள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே மோதல் நடந்துவரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன் போராட்டம் நடந்தது.

Advertisement

குறித்த சம்பவத்தினால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம், போராட்டங்களுக்கு தடை விதிக்கும்படி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு அறிவித்த நிலையில் பல்கலைக்கழகம் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து, அந்த பல்கலைக்கழகத்துக்கான நிதியுதவியை நிறுத்தியதோடு, வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கும் உடனடி தடை விதித்து, நேற்று முன்தினம் (23) அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதனால், பல்கலைக்கழகத்தில் கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இந்த உத்தரவுக்கு, மாசசூசெட்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version