இலங்கை

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்

Published

on

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 2.2% குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

இருப்பு பணம் அதிகரிப்பு

புழக்கத்தில் உள்ள நாணயத்தின் அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கியில் வைத்திருக்கும் வணிக வங்கிகளின் வைப்புத்தொகை அதிகரிப்பு ஆகியவற்றால், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது இருப்பு பணம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தனது வாராந்திர பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினத்திற்கான நிலவரப்படி, மொத்த நிகர சந்தை பணப்புழக்க பற்றாக்குறை ரூ. 187.53 பில்லியனாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஷ

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version