சினிமா

நாக சைதன்யாவை அட்டாக் செய்வது போல் பதிவிட்டாரா சமந்தா! வைரலாகும் இன்ஸ்டா பதிவு

Published

on

நாக சைதன்யாவை அட்டாக் செய்வது போல் பதிவிட்டாரா சமந்தா! வைரலாகும் இன்ஸ்டா பதிவு

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை சமந்தா காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஹோட்டலான ‘Qasr Al Sarab Desert Resort by Anantara’ ஹோட்டலுக்கு சென்றுள்ளார் சமந்தா.அப்போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, அதற்கு தனது ஸ்டைலில் கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். “எந்த அலையும் நிலைக்காது, எந்த புயலும் நிரந்தரமாக இருக்காது. எல்லாவற்றையும் கடந்து சென்றுதான் ஆகவேண்டும். அதன் பின்தான் வழியை கண்டுபிடிக்க முடியும்” என சமந்தா பதிவு செய்துள்ளார்.இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சிலர், நாக சைதன்யாவை அட்டாக் செய்வது போல இந்த பதிவு உள்ளது என கூறி வருகிறார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version