இலங்கை

போதைப்பொருட்களுடன் களைகட்டடிய களியாட்டம் ; சிக்கிய பல்கலை மாணவர்கள்

Published

on

Loading

போதைப்பொருட்களுடன் களைகட்டடிய களியாட்டம் ; சிக்கிய பல்கலை மாணவர்கள்

பாணந்துறையில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட 26 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை, மஹபெல்லான பகுயில் சுற்றுலா ஹோட்டலில் ஒன்றில் போதைப்பொருட்களுடன் களியாட்ட நிகழ்வு ஒன்று இடம்பெறுவதாக அலுபோமுல்ல பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, 26 கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 10 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அலுபோமுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version