பொழுதுபோக்கு

கனிமா பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம்… இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோ!

Published

on

கனிமா பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம்… இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோ!

திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.விழாவின் ஒரு பகுதியாக நடந்த கொண்டாட்டத்தில், ஏ.ஆர். முருகதாஸ் தனது மகளுடன் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் பிரபலமான ‘கனிமா’ பாடலுக்கு தந்தை-மகள் இருவரும் போட்டி போட்டு குத்தாட்டம் போட்டுள்ளனர்.பொதுவாக பொதுநிகழ்வுகளில் அமைதியாகவும், சாதாரணமாகவும் காணப்படும் ஏ.ஆர். முருகதாஸ், இந்த விழாவில் தனது மகளுக்காக உற்சாகமாக நடனமாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது. அவரது நடன அசைவுகள், ஒரு சினிமா கலைஞருக்கே உரிய ஸ்டைலுடன் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மகளுடன் இணைந்து அவர் வெளிப்படுத்திய உற்சாகம், பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.இந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மகளின் பூப்புனித நீராட்டு விழாவை தனது சொந்த ஊரில் தடபுடலாக நடத்தியது மட்டுமின்றி, அவருடன் இணைந்து மனம் விட்டு மகிழ்ச்சியாக நடனமாடிய ஏ.ஆர். முருகதாஸின் இந்த செயல், இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது போன்ற தனிப்பட்ட தருணங்களை ரசிகர்கள் பெரும்பாலும் பார்ப்பதில்லை என்பதால், இந்த வீடியோ வைரலாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.A R Murugadoss dances for ‘Kanimaa…’ 🕺pic.twitter.com/nIGw85dXjC

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version