சினிமா

முதல் கணவருடன் குடும்பம் நடத்திக்கொண்டே இரண்டாம் திருமணம்!! பணமோசடியில் சிக்கிய சீரியல் நடிகை..

Published

on

முதல் கணவருடன் குடும்பம் நடத்திக்கொண்டே இரண்டாம் திருமணம்!! பணமோசடியில் சிக்கிய சீரியல் நடிகை..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ரிஹானா. பல சீரியல்களில் நடித்து வரும் ரிஹானா, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி நிறைவு பெற்ற பொன்னி சீரியலில் அம்மா ரோலில் நடித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் பிரச்சனை தொடர்பாக சில சர்ச்சையிலும் சிக்கியிருந்தார்.இந்நிலையில் திருமணம் செய்ததை மறைத்து பணம் மோசடி செய்ததாக நடிகை ரிஹானா பேகம் மீது போலிசில் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பூந்தமல்லி காவல் நிலையத்தில், ராஜ் கண்ணன் என்பவர் அளித்த புகாரில், தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரிஹானா ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் விவாகரத்து ஆனதாக கூறினார்.அதனால் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இதன்பின் ரிஹானாவுக்கு ரூ. 20 லட்சம் வரை பணம் செலவு செய்த நிலையில், அவரது வீட்டிற்கு சென்றபோது கணவருடன் விவாகரத்தாகாமலேயே தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்திருக்கிறார்.இப்புகாரின் அடிப்படையில் இருவரையும் பூந்தமல்லி போலிசார் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version