இலங்கை

வாடகைக்கு எடுத்த வாகனத்தை விற்பனை செய்த கில்லாடிகள் கைது!

Published

on

Loading

வாடகைக்கு எடுத்த வாகனத்தை விற்பனை செய்த கில்லாடிகள் கைது!

வாடகைக்கு வாகனங்களைப் பெற்றுப் போலியான ஆவணங்களைத் தயாரித்து விற்பனைசெய்த குற்றச் சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தையில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து போலித் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம், அண்மையில் பதிவுசெய்யப்பட்ட இரு வாகன இலக்கத்தகடுகள். ஐந்து கைபேசிகள். ஒரு முச்சக்கரவண்டி, 23 கிராம் ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இவர்கள் அநுராதபுரத்தில் வாடகைக்குப்பெற்ற வாகனம் ஒன்றை ஒரு கோடி ரூபாவுக்கும், பொரளையில் வாடகைக்குப்பெற்ற கார் ஒன்றை 90 இலட்சம் ரூபாவுக்கும், பாணந்துறையில் வாடகைக்குப் பெற்ற கார் ஒன்றை 58 இலட்சம் ரூபாவுக்கும், மொரக்கவேவவில் வாடகைக்குப் பெற்ற கார் ஒன்றை 50 இலட்சம் ரூபாவுக்கும், வெல்லம்பிட்டியவில் வாடகைக்குப் பெற்ற கார் ஒன்றை 42 இலட்சம் ரூபாவுக்கும் விற்பனை செய்துள்ளனர். 30 மற்றும் 36 வயதுடைய சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version