இலங்கை

இஸ்ரேல் – ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு!

Published

on

இஸ்ரேல் – ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கே சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கையைப் பாதிக்கும் பலகாரணிகள் உள்ளன. முக்கியமானது எரிபொருள் விலை அதிகரிப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஏற்கனவே பத்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தப் போர் பிராந்திய ரீதியாக பரவினால், இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியை மோசமாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலைமை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீது மிகவும் எதிரமறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வேலை, பாதுகாப்பு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன கடுமையாகப் பாதிப்படையும் – என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version