சினிமா

ஒரே காரில் இணைந்து சென்ற விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ

Published

on

ஒரே காரில் இணைந்து சென்ற விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் ஜோடியாக வெளிநாட்டிற்கு செல்வது, ஹோட்டல்களில் சந்தித்துக்கொள்வது என இருக்கின்றனர்.இருவரும் இணைந்து வெளிநாட்டிற்கு சென்றாலும் தனித்தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மட்டுமே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.சமீபத்தில் குபேரா படத்தின் ப்ரோமோஷன் விழாவில் ஒவ்வொரு நடிகரிடம் இருந்து என்ன வேண்டும் என ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து எதை எடுத்துக்கொள்வீர்கள் என கேள்வி கேட்டபோது, “விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்வேன்” என ராஷ்மிகா கூறியிருந்தார்.இந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் விமான நிலையத்தில் இருந்து ஒரே காரில் ஏறிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அதிலும் ஒன்றாக வர கூடாது என்பதற்காக முதலில் ராஷ்மிகா வந்து காரில் ஏற, அவர் பின் தாமதமாக வந்து காரில் ஏறுகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version