இந்தியா

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி!

Published

on

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி!

பிரதமர் மோடி உத்தியோகபூர்வ பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ஆம் திகதி சைப்ரஸ் சென்ற நிலையில் அந்நாடு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை சந்தித்தார்.

இதனை தொடர்ந்து கனடா சென்ற அவர், கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்.

Advertisement

இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்நிலையில்,கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா புறப்பட்டு அந்நாட்டு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பென்கொவிக்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version