சினிமா

90Sகளின் கனவு நாயகனுக்கு இன்று 55வது பிறந்த நாள்.!யார் அந்த நாயகன் தெரியுமா?

Published

on

Loading

90Sகளின் கனவு நாயகனுக்கு இன்று 55வது பிறந்த நாள்.!யார் அந்த நாயகன் தெரியுமா?

தமிழ் சினிமாவின்  90S  காலத்தில் பல இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர்  நடிகர் அரவிந்த் சாமி.  இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இவர் இன்று தனது 55வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.மேலும் இவர் இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளியான “தளபதி” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகிய இவர் இன்று வரைக்கும் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருக்கிறார். இவர்  முதல் திரைப்படத்தில் ரஜினி, மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் மீண்டும் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்த  “ரோஜா” திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.  இவர்  சினிமா நடிப்பில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் “தனி ஒருவன் ” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் .இன்று தனது 55வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிலும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version