பொழுதுபோக்கு

ஆதிக் இயக்கத்தில் ஏ.கே 64; அஜித் படத்தில் இணையும் மோகன்லால்? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Published

on

Loading

ஆதிக் இயக்கத்தில் ஏ.கே 64; அஜித் படத்தில் இணையும் மோகன்லால்? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் மோகன்லால் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் விருப்ப நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் வெளியான மோகன்லாலின் ‘தொடரும்’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ 230 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படத்தில் ‘பென்ஸ்’ என்ற கேரக்டரில் மோகன்லால் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.முன்னதாக கடந்த 2023-ல் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்திருந்தாலும், 2019-ல் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ என்ற தமிழ் படத்தில் தான் கடைசியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். தற்போது, ‘தொடரும்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, தமிழ் சினிமாவுடனான அவரது பிணைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், ‘குட் நைட்’ புகழ் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள எஸ்.கே.24 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக பரவலாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “எஸ்.கே 24 ஒரு தந்தை-மகன் உறவைப் பற்றிய கதை, இதில் மோகன்லால் சிவாவின் தந்தையாக நடிப்பார் என்றும், இந்தக் கேரக்டருக்கு மோகன்லால் தான் விநாயக்கின் முதல் தேர்வு” என்று ஒரு தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.மேலும், அதே தகவல் வட்டாரம் கூறும் போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் அஜித்தின் ‘ஏ.கே. 64’ படத்திற்கும் மோகன்லால் தான் முதல் தேர்வு என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. “ஆதிக்கும் மோகன்லாலிடம் கதையை விவரித்துள்ளார். ஆறு முறை தேசிய விருது வென்ற நடிகருக்கான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் இறுதி செய்து வருகின்றனர். இது நடந்தால், ஏ.கே  64 ஒரு அசத்தலான கூட்டணி படமாக அமையும்” என்றும் தகவல் வட்டாரம் மேலும் குறிப்பிட்டது.இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பரவலாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில், மோகன்லால் தற்போது இலங்கையில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார், மேலும் நயன்தாரா இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். மோகன்லாலின் இந்த திடீர் தமிழ் சினிமா பிரவேசம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version