இலங்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் நச்சுத்தன்மை – ஜேர்மன் ஆய்வகம் அறிக்கை

Published

on

Loading

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் நச்சுத்தன்மை – ஜேர்மன் ஆய்வகம் அறிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மன் ஆய்வகம் ஒன்று, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மனித இம்யூனோகுளோபுலின் (Human Immunoglobulin) மருந்து அசுத்தமான தண்ணீரால் நிரப்பப்பட்டிருப்பதையும், அதில் ஆபத்தான பாக்டீரியாக்கள் கலந்திருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், ரிட்யூக்ஸிமாப் (Rituximab) எனப்படும் புற்றுநோய் மருந்து தொகுதியானது சலைன் கரைசலை (உப்பு நீர்) மட்டுமே கொண்டிருப்பதாகவும், புற்றுநோயை குணப்படுத்தும் புரதங்கள் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

மாலிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்ஷ்மி கிரிகம இதனைத் தெரிவித்தார். 

இந்த இரண்டு மருந்துகளும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருப்பதை சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில், இந்த கொள்முதலுக்காக இலங்கை அரசாங்கம் 144.74 மில்லியன் ரூபாயை செலவழித்துள்ளது என கிரிகம தெரிவித்தார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version