இலங்கை

தவறாக வாக்கினை அளித்த உறுப்பினர்!

Published

on

தவறாக வாக்கினை அளித்த உறுப்பினர்!

வலி. மேற்கு பிரதேசசபையில் உறுப்பினர் ஒருவர் வாக்கினை தவறாக அளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தனும், தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாரும் போட்டியிட்ட நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாருக்கு  அளிக்கவேண்டிய வாக்கினை ச.ஜெயந்தனுக்கு அளித்துள்ளார். பின்னர் அந்த வாக்கினை மாற்றுமாறு அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் வாக்கு பதிவு செய்யப்பட்டதால் அதனை மாற்றம் செய்ய முடியாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version