உலகம்

தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

Published

on

தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் பதவி விலகக் கோரி பேங்காக் வீதிகளில் ‘மஞ்சள் சட்டை’ அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அண்மையில் பிரதமர் ஷினவாத் கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்று சமூக ஊடகத்தில் கசிந்தது.

Advertisement

அந்த உரையாடலில் ஷினவாத் சென்னை ‘அங்கிள்’ என்று அழைத்தார். 

மேலும் தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவத் தளபதியைத் தமது எதிரியென ‌ஷினவாத் குறிப்பிட்டார். இந்த உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து நூற்றுக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கு அருகே திரண்டு போராட்டம் நடத்தினர்.

Advertisement

ஷினவாத்திடம் பிரதமருக்கு உண்டான தகுதிகள் ஏதும் இல்லை என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version