சினிமா

21 வயதில் மிஸ் இந்தியா பட்டம்!! காதல் கணவருக்காக சினிமாவை தியாகம் செய்த நடிகை..இவரா?

Published

on

21 வயதில் மிஸ் இந்தியா பட்டம்!! காதல் கணவருக்காக சினிமாவை தியாகம் செய்த நடிகை..இவரா?

21 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற ஒரு நடிகை சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது ஸ்டார் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவில் நடிக்காமல் குடும்பத்தை பார்த்துக்கொண்டும் வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வருகிறார்.அவர் வேறுயாருமில்லை பாலிவுட் நடிகை நம்ரதா ஷிரோத்கர் தான். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை 5 வருடமாக காதலித்தப்பின் கரம் பிடித்தார் நம்ரதா.1998ல் சல்மான் கானுக்கு ஜோடியாக Jab Pyaar Kisise Hota Hai என்ற படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் நடித்த நம்ரதா, 1993ல் 21 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டு வம்சி என்ற படம் தான் நம்ரதா வாழ்க்கையை மாற்றியது.சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் ஜோடிப்போட்ட போது அவரை காதலிக்க ஆர்மபித்தார் 5 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி 2005ல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் நம்ரதா நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து குடும்பத்தை பார்க்க ஆரம்பித்தார்.அப்போது, வேலைக்குச்செல்லும் மனைவியை எனக்கு பிடிக்காது என்று மகேஷ் பாபு கூறியதாகவும் ஆனால் எங்களுக்கு இடையிலான அன்பும் பாசமும் உன்னதமானது என்றும் ஒருமுறை நம்ரதா தெரிவித்திருக்கிறார். தனது காதல் கணவர் மகேஷ் பாபுவுக்காக தன்னுடைய கரியரையே தூக்கி ஒதுக்கி வைத்திருக்கிறார் நம்ரதா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version