சினிமா

25 வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு! – BMW கார் வாங்கிய நெகிழ்ச்சியில் பிரபல நடிகர்!

Published

on

Loading

25 வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு! – BMW கார் வாங்கிய நெகிழ்ச்சியில் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் மிக மென்மையாக, தன்னை உயர்த்திக் கொண்ட நடிகர்களில் ஒருவர் என்றால், அது விதார்த் தான். 2001ம் ஆண்டு ‘மின்னலே’ திரைப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது சினிமா உலகில் 25 ஆண்டுகளை கடந்தவர். இந்தப் பயணத்தை நினைவுகூரும் விதமாக, விதார்த் தனது வாழ்நாளில் முதல் முறையாக BMW கார் ஒன்றை வாங்கிய மகிழ்ச்சியை ரசிகர்களிடமும் திரையுலகத்தினரிடமும் பகிர்ந்துள்ளார்.ஆரம்பத்தில் பின்னணி காட்சிகள், நண்பர் என சிறிய கதாப்பாத்திரங்களிலேயே நடித்திருந்தார். பின்னர் படிப்படியாக சினிமாவில் உயர்ந்திருந்தார். அத்தகைய நடிகர்,சமீபத்தில் ஒரு அழகான BMW காரை வாங்கியுள்ளார்.விதார்த் இந்த கார் வாங்கிய போட்டோவினை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும், ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அவரது சாதனையை பாராட்டியுள்ளனர். இதனுடன் விதார்த் “இது என்னுடைய 25  வருட உழைப்பிற்கு கிடைத்த பரிசு..” என்ற பதிவினையும் வெளியிட்டிருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version