சினிமா
ECR-ரில் பிரியா பவானி சங்கரின் ஹோட்டல்!! பிரபலங்கள் நடத்தும் ஹோட்டல் பிசினஸ்..யார் யார்?
ECR-ரில் பிரியா பவானி சங்கரின் ஹோட்டல்!! பிரபலங்கள் நடத்தும் ஹோட்டல் பிசினஸ்..யார் யார்?
சினிமாவில் நடிப்பதை தாண்டி சைக்கிளிங்கில் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர் நடிகர் ஆர்யா. திருமணத்திற்கு பின் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆர்யா, தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் 5 இடங்களில் Sea Shell ஹோட்டல் நடத்தி வரும் ஆர்யா, உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை.அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் IT அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆர்யா, தனக்கும் அந்த ஹோட்டலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருக்கிறார் இந்நிலையில் சினிமாவை தாண்டி ஹோட்டல் நடத்தி வரும் பிரபலங்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சூரி, தற்போது கதாநாயகனாக நடித்து வெற்றிகளை கொடுத்து வருகிறார். இதற்கிடையில், ஹோட்டல் பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார். மதுரையின் பல்வேறு பகுதியின் அம்மன் மெஸ் என்ற பெயரில் ஹோட்டலை நடத்தி வருகிறார்.நடிகை சிம்ரன், சென்னையில் சொந்தமாக ஹோட்டல் ஒன்றினை நடத்தி வருகிறார். காட்கே பை சிம்ரன் என்ற உணவகம் அவர் பெயரில் சோழிங்கநல்லூரில் அமைந்துள்ளது.நடிகர் ஜீவா நடிப்பை தாண்டி ஹோட்டல் பிசினஸில் ஆர்வம் கொண்டவர். ஒன் எம்பி என்ற பெயரில் சென்னை தி நகரில் தன் மனைவி நிர்வாகத்தில் நடத்தி வருகிறார்.நடிப்பை தாண்டி நடிகை பிரியா பவானி சங்கர் ஹோட்டல் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். ஈசிஆர் பகுதியில் லயம்ஸ் டின்னர் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.அவர்களை போல் ஆர் கே சுரேஷ் ஹோட்டலையும், இயக்குநர் அமீர் கஃபே ஒன்றையும் சென்னையில் நடத்தி வருகிறார்கள். இவர்களை தாண்டி பலர் முன்னணி நட்சத்திரங்கள் ஹோட்டல் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.