வணிகம்

Gold Rate Today, 19 June: ரூ.74,000-ஐ தொட்ட தங்கம் விலை; 2-வது நாளாக விலை உயர்வு!

Published

on

Gold Rate Today, 19 June: ரூ.74,000-ஐ தொட்ட தங்கம் விலை; 2-வது நாளாக விலை உயர்வு!

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து, கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது.நேற்று முன்தினம் ஒருகிராம் ரூ.9 ஆயிரத்து 200க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 120 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version