இலங்கை

இண்டிகோ விமானத்தில் நடுவானில் கோளாறு; அச்சத்தில் பயணிகள்

Published

on

Loading

இண்டிகோ விமானத்தில் நடுவானில் கோளாறு; அச்சத்தில் பயணிகள்

  சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்துக்கு திரும்பிவந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை , சென்னையில் இருந்து தூத்துக்குடி, ஹைதராபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

விமானக்கள் ரத்து செய்யப்பட்டதால் , விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version