இலங்கை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தினால் SQM Foundation Canada நிதி அனுசரணையில் கட்டப்பட்ட வீடு கையளிப்பு!

Published

on

Loading

ஜீவ ஊற்று அன்பின் கரத்தினால் SQM Foundation Canada நிதி அனுசரணையில் கட்டப்பட்ட வீடு கையளிப்பு!

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது SQM அமைப்போடு கைகோர்த்து பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.

 விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

 அந்தவகையில் கடந்த 16.06.2025 அன்று SQM Foundation Canada இனது 33 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 138 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் இல்மானது மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. 

 இதற்கான நிதி உதவியை SQM Foundation Canada இனது ஸ்தாபகர் கமலநாதன் பாக்கியராசா அண்ணா அவர்கள் வழங்கியுள்ளார்கள். அத்தோடு நிதியுதவியை வழங்கியது மட்டுமல்லாது குடும்பமாக வந்து இந்த வீட்டினை பயனாளர்களுக்கு கையளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

 இவ் மகத்தான உதவியினை நல்கிய அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 இவ் இல்லமானது 10 லெட்சம் என இலங்கை பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அன்பின் இல்லங்களை நீங்கள் எம் உறவுகளுக்கு நிர்மாணித்துக் கொடுக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும். 

 குறிப்பாக தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம். 

Advertisement

 நன்றி

 JEEVAOOTRU 

trust

Advertisement

http://www.jeevaootru.com 

contact@jeevaootru.com

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version