சினிமா

தனுஷுடன் இணைந்து நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்! இத்தனை கோடியா

Published

on

தனுஷுடன் இணைந்து நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்! இத்தனை கோடியா

நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் குபேரா. இப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.இப்படத்தில் தனுஷுடன் முதல் முறையாக ராஷ்மிகா இணைந்து நடித்திருக்கிறார். அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா என தொடர்ந்து பான் இந்தியா ஹிட் படங்களை ராஷ்மிகா கடந்த சில ஆண்டுகள் கொடுத்துள்ளார்.இதன்மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ராஷ்மிகா, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார். சிக்கந்தர் படத்திற்காக இவர் ரூ. 15 கோடி சம்பளம் சொல்லப்படுகிறது.ஆனால், அப்படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட, குபேரா படத்திற்கு குறைவான சம்பளத்தைதான் வாங்கியுள்ளார். ஆம், குபேரா படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்க ரூ. 5 கோடி சம்பளமாக ராஷ்மிகா மந்தனா வாங்கியுள்ளார் என தகவல் கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version