சினிமா
ரஜினி சொட்டை ஆனதுக்கு இதுதான் காரணம்!! ஜிகிரி தோஸ்த் ராஜ் பகதூர் சொன்ன ரகசியம்..
ரஜினி சொட்டை ஆனதுக்கு இதுதான் காரணம்!! ஜிகிரி தோஸ்த் ராஜ் பகதூர் சொன்ன ரகசியம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய 72வது வயதில் கூலி, ஜெயிலர் 2 போன்ற படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். விரைவில் இந்த இரு படங்களில் ரிலீஸாகவுள்ள நிலையில், ரஜினிகாந்த் குறித்து அவரது நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில், 1970ல் ரஜினி கண்டக்டராக வேலைக்கு சேர்ந்தான். நான் டிரைவ்ராக வேலைக்கு சேர்ந்தேன். முதன்முதலில் அன்றைக்கு தான் நாங்கள் சந்தித்தோம். ஒரே பஸ்ஸில் எங்கள் இருவரையும் டிரைவர், கண்டக்டராக வேலைக்கு போட்டாங்க.அன்றிருந்த நட்பு 53 வருடங்களாக இன்றுவரை தொடர்கிறது. அப்போ எப்படி போடா.வாடானு பேசுவமோ, இப்பவும் அப்படித்தான் பேசுவோம். உடல் மட்டும் தான் வெவ்வேறு, ஆனால் உயிர் ஒன்றுதான் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் இருவரும் உயிர் நண்பர்கள்.இருவரும் வேலை பார்த்தப்போது அடிக்கடி நாடகம் போட்டு இருவரும் நடிப்போம். நாடகங்களில் மெயின் கேரக்டர்கள் எல்லாம் ரஜினிதான் நடிப்பான். நான் சின்னசின்ன ரோல் பண்ணுவேன். அவன் நாடகத்தில் நடிப்பதை பார்த்து நானே வியந்து இருக்கிறேன். இவன் ஏன் சினிமாவில் நடிக்க முயற்சி செய்யக்கூடாது என்று அவனுக்கு ஒரு ஊக்கம் கொடுத்து, நடிக்க முயற்சி செய் என்று சொன்னேன். எனக்கெல்லாம் யாரு சான்ஸ் கொடுப்பா என்று அவன் சொன்னான்.அப்படி அட்வைஸ் செய்து 2 ஆண்டுகள் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் படித்து முடித்துவிட்டு, கன்னட நாடகம் ஒன்றில் நடித்தபோது கே பாலச்சந்தர் சிறப்புவிருந்தினராக வந்து அவனை பார்த்து வியந்தார். அப்படி வாய்ப்பு கிடைத்து மூன்று முடிச்சு படத்தில் வில்லனாக நடிக்க பாலச்சந்தர் கேட்டு என்ன ஸ்டைலில் நடிப்பாய் என்று நடிக்க வைத்தார்.ரஜினியும் சிகரெட்டை வாயில் தூக்கி போட்டு பிடிப்பது, கண்ணாடியை திருப்பி போடுவது என்று தன்னிடம் இருந்த அனைத்தையும் மூன்று முடிச்சு படத்தில் காட்டியதால் அடுத்தடுத்த வாய்ப்பு வந்தது. 24 மணிநேரமும் ஷூட்டிங், 170 படம் முடிச்சுட்டான், பல விருதிகள் வாங்கிவிட்டான், தமிழ் மக்கள் மத்தியில் நல்ல மனிதன் என்ற பெயரெடுத்திருக்கிறான், அதைவிட என்ன வேண்டும்.கண்டக்டர் வேலை செய்த போது நல்லா ஸ்டைல் பண்ணுவான், பஸ்ல எவ்ளோ கூட்டாமானும் சரசரன்னு டிக்கெட் கொடுப்பா. தலைமுடியை சிலிப்பி விட்டுக்கொண்டே இருப்பான். சிக்னலில் பஸ் நின்னா, கீழே இறங்கி ஸ்டைலா நின்னு தம் அடிப்பான். அவன் தலைமுடியை கோதிவிட்டதால் தான் முடியெல்லாம் போச்சு. இப்போ அவன் சொட்டையானதுக்கு இதுதான் காரணம்.ஸ்டைல் பண்ணிப்பண்ணி தான் முடியே இல்லாம போச்சு, ரோட்ல போகும்போது சிக்ரெட்டை தூக்கிப்போட்டு வாய்ல பிடிப்பான். டேய் பாக்குறவங்க பைத்தியம்னு சொல்லுவாங்கன்னு திட்டுவேன், இல்லமா சும்மா பிராக்டிஸ் பண்றேன்னு சொல்லுவான். அப்போ அவன் முயற்சி செய்ததால் தான் இன்று திரையில் அதையெல்லாம் அசால்டாக செய்கிறான் என்று ரஜினிகாந்தின் நண்பர் ராஜ் பகதூர் பகிர்ந்துள்ளார்.