விளையாட்டு

IND vs ENG LIVE Score, 1st Test Day 1: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்டில் இன்று மோதல்

Published

on

IND vs ENG LIVE Score, 1st Test Day 1: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்டில் இன்று மோதல்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கி நடக்கிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமாடுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதேபோல், காயம் காரணமாக முன்னணி பவுலர் முகமது ஷமி இடம் பெறவில்லை. ஜடேஜா, பும்ராவைத் தவிர அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இந்திய அணி வீரர்கள் பட்டியல்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், அபிமன்யு ஈஸ்வரன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணாஇங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் வீரர்கள்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version