சினிமா
சிவகார்த்திகேயன் படத்தை பெரிய விலைக்கு வாங்கிய NETFLIX..எத்தனை கோடி தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தை பெரிய விலைக்கு வாங்கிய NETFLIX..எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு வெளியான ‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்தார். நல்ல விமர்சனங்களுடன் வசூலிலும் படம் சாதனை படைத்தது.இதையடுத்து தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘மதராஸி’ படத்திலும் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘மதராஸி’ படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.மேலும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் விட்யுத் ஜம்முவால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இந்நிலையில், இப்படத்தின் OTT உரிமை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை ரூ. 23 கோடிக்கு வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.