இலங்கை

மூன்றாவது நபரையும் பலியெடுத்த ஓமந்தை விபத்து!

Published

on

மூன்றாவது நபரையும் பலியெடுத்த ஓமந்தை விபத்து!

கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

 இந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொண்டு விட்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கார் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கலாச்சார உத்தியோதராக கடமை ஆற்றி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisement

 அதன் பின்னர் அவரது மகனும் உயிரிழந்தார்.

இதில் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 15 ஐ சேர்ந்த துரைச்சாமிக்குருக்கள் சுவாமிநாதஐயர் (வயது 69) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பெண் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

 சாட்சிகளை ஓமந்தை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Advertisement

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version