இலங்கை

யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று! மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Published

on

Loading

யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று! மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

யாழப்பாணத்தில் பல பிரதேசங்களில் சற்று முன்னர் பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது

திடீரென சுழற்றி அடித்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

Advertisement

தற்போது இடி மழையுடன் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதேவேளை பாரிய காற்றினால் மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மின்சார சபையை தொடர்புகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளம்குமரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

Advertisement

அவரது பதிவில்

அறிவித்தல்

யாழ் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும்.

Advertisement

இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.

எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு

ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Jaffna 0212222609

Thirunelveli Kondavil 0212222498

Chunnakam 0212240301

Advertisement

Chavakachcheri 0212270040

Point Pedro 0212263257

Vaddukoddai 0212250855

Advertisement

Velanai 0212211525

Kankesanthurai 0212245400 என்ற இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version