இலங்கை

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக சிங்களப்பெண்

Published

on

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக சிங்களப்பெண்

கிழக்கிற்கு நிரந்தர மாகாண கல்விப்
பணிப்பாளராக    திருமதி. எஸ்.ஆர்.ஹசந்தி  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இஷ்லாமிய, தமிழர் என மாகாண கல்விப்பணிப்பாளராக கிழக்கில் கடமை புரிந்த வரலாற்றில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹசந்தி மாத்தறை மாவட்டத்தின் மித்தெனியவை
பிறப்பிடமாக கொண்டு அம்பாறையை
வாழ்விடமாக கொண்டவர்.

கிழக்கு, மத்தி, மேல் மாகாணங்களுக்கான நிரந்தர மாகாண கல்விப்பணிப்பாளர்களை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச்
சேவை குழு நியமனம் செய்துள்ளது.

இக்கடிதங்களை கல்விச் சேவைக்குழு
கல்வி அமைச்சின் ஊடாக தெரிவு செய்யப்
பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது.

Advertisement

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கு
மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி.
எஸ்.ஆர்.ஹசந்தி நியமனம் செய்யப்பட்டு
உள்ளார்.

திருமதி ஹசந்தி இதுவரை பதில்
மாகாண கல்விப் பணிப்பாளராக கடமை
புரிந்து வந்துள்லார்.

2005 ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக
சேவைக்கு திறந்த போட்டிப்பரீட்சை அடிப்
படையில் நியமனம் பெற்ற இவர் 2019 ல்
அச்சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி
உயர்த்தப்பட்டார்.

Advertisement

தற்போது கிழக்கு மாகாணத்தில்கடமையில்
உள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை-1
உத்தியோகத்தர்களில் சேவை மூப்புக்கூடிய
இவர் 50 வயதை தாண்டாத ஒரு திறமை
யான உத்தியோகத்தர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவர்  நீண்ட காலம் அம்பாறை வலயக் கல்வி
அலுவலகத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version