இலங்கை

பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Published

on

Loading

பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. 

 அந்த அறிவிப்பில் உள்ளதாவது

Advertisement

தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எதிர்காலத்தில் எண்ணெய் தொடர்பாக நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமின்மை காரணமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூட முயற்சிக்கும் சூழலில், உலக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

 அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு, உலக எரிபொருள் போக்குவரத்தில் முக்கிய புள்ளியான ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் முயற்சிக்கிறது.

Advertisement

 அந்த சூழ்நிலையுடன் எழுந்துள்ள ஸ்திரமின்மையை எதிர்கொண்டு இன்று உலக எரிபொருள் விலைகளும் அதிகரித்துள்ளன.

அதன்படி, 3 சதவீத விலை அதிகரிப்புடன், பிரெண்ட் சந்தை எரிபொருளின் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் $79 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Advertisement

 தற்போதைய நிலைமை குறித்து, உள்நாட்டு சந்தையில் எண்ணெய் விலையில் இந்த நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 இருப்பினும், தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version