இலங்கை
மயிரிழையில் உயிர் தப்பிய சாரதியும் பயணிகளும்
மயிரிழையில் உயிர் தப்பிய சாரதியும் பயணிகளும்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா நகரில் முச்சகரவண்டி ஒன்று இன்று (23)விபத்துக்குள்ளாகியுள்ளது.
நானுஓயாவில் இருந்து நானுஓயா பாடசாலைக்கு இரு மாணவர்களை அழைத்து சென்ற போது முன்னாள் சென்ற பாரவூர்தியை முந்தி செல்ல முயன்றது.
இதன் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த முச்சகரவண்டி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (23) காலை நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும், இதில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவர்களும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தின் போது வண்டியில் சாரதி உட்பட இருவர் பயணித்த நிலையில் அவர்களுக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என தெரிவித்த நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.