வணிகம்
வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி… தனியார் வங்கிகளின் லிஸ்ட் இதோ!
வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி… தனியார் வங்கிகளின் லிஸ்ட் இதோ!
ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, நிலையான வைப்பு நிதிகள் (Fixed Deposits – FDs) எப்போதும் முதன்மையான தேர்வாக இருந்து வருகின்றன. சந்தை அபாயங்கள் இல்லாமல் பாதுகாப்பான, உறுதியான வருமானத்தை வழங்கும் இந்தத் திட்டம், தனிநபர்களுக்கு பெரும் பலன் அளிக்கிறது. பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, பல தனியார் துறை வங்கிகளும் அதிக வட்டி விகிதங்களை வழங்குவதால், எந்த வங்கியில் முதலீடு செய்வது சிறந்தது என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகள் வழங்கும் சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள், கால அளவுகள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.தனியார் வங்கியின் நிலையான வைப்பு நிதிகள் என்றால் என்ன?தனியார் வங்கி நிலையான வைப்பு நிதிகள் என்பவை, உங்கள் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தனியார் வங்கிகளில் முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தை பெறுவதாகும். இந்த சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை உறுதி செய்கின்றன.அதிக வட்டி விகிதங்களை வழங்கும் முன்னணி தனியார் வங்கிகள் (2025 நிலவரப்படி): வங்கியின் பெயர்அதிகபட்ச வட்டி விகிதம் (%)அதிகபட்ச வட்டி விகிதத்திற்கான கால அளவுசி.எஸ்.பி வங்கி7.413 மாதங்கள்யெஸ் பேங்க்7.13 முதல்