சினிமா
41 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை சதா! காரணம் என்ன
41 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை சதா! காரணம் என்ன
ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சதா. இதன்பின் விக்ரமுடன் இணைந்து அந்நியன் திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் மாபெரும் ஹிட்டான நிலையில், முன்னணி நடிகையாக வலம் வந்தார்.தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வந்த நடிகை சதா, ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி, முழுமையாக புகைப்பட கலைஞராக மாறிவிட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து வன விலங்கு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.41 வயதாகும் நடிகை சதா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அவரை பார்க்கும் ரசிகர்கள் பலரும், எப்போது திருமணம் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனால் தனது திருமணம் குறித்து நடிகை சதா பேசியுள்ளார்.”திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம். திருமணத்தின் மீது எனக்கு ஆசையும் இல்லை நம்பிக்கையும் இல்லை. புகைப்பட துறையில் இன்னும் சாதிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. அதன் பின்தான் திருமணத்தை பற்றி யோசிப்பேன்” என கூறியுள்ளார். திருமணம் குறித்து நடிகை சதா பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.