இலங்கை

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் ; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

Published

on

Loading

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் ; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து அதனை மீறாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஈரான், முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை எனினும், இஸ்ரேலுடனான யுத்தநிறுத்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர்நிறுத்தம் ஏற்படும் என்று முழுமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Advertisement

அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி, ஈரான் முதல் கட்ட நடவடிக்கையாக போர்நிறுத்தத்தில் ஈடுபடும். தொடர்ந்து இஸ்ரேலும் 12-வது மணிநேரத்தில் போர்நிறுத்தம் மேற்கொள்ளும்.

அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும்.

12 நாள் போரானது அதிகாரப்பூர்வ முறையில் உலகம் வணங்கும் வகையிலான ஒரு முடிவுக்கு வரும்.

Advertisement

இந்த போர்நிறுத்த காலகட்டத்தில், இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version