சினிமா

தக் லைஃப் படத்தின் தோல்வி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணி ரத்னம்

Published

on

தக் லைஃப் படத்தின் தோல்வி.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணி ரத்னம்

2025ம் ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தக் லைஃப். நாயகன் படத்திற்கு பின் கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணி ரத்னம் – கமல் ஹாசன் இருவரும் இப்படத்திற்காக இணைந்தனர்.இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்தனர். மேலும் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.முதல் நாளே தெரிந்துவிட்டது, இது படுதோல்விதான் என்று. இதனால் உலகளவில் ரூ. 90 கோடி வரை மட்டுமே இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் குறித்து ரிலீஸுக்கு பின் மணி ரத்னம் பேசியுள்ளார்.”தக் லைஃப் திரைப்படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். நாயகன் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்தாலும், அதே போன்றதொரு படத்தை கொடுக்க தாங்கள் விரும்பவில்லை என்று வேறு மாதிரியான சோதனையை மேற்கொண்ட நிலையில், ரசிகர்கள் நாயகன் படத்தை போலவே எதிர்பார்த்த நிலையில்தான் அவர்களுக்கு ஏமாற்றம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நாங்கள் இருவரும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்” என கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version