இலங்கை

தமிழர் பகுதியொன்றில் பிரபல போதை பொருள் வியாபாரிகள் அதிரடியாக கைது!

Published

on

Loading

தமிழர் பகுதியொன்றில் பிரபல போதை பொருள் வியாபாரிகள் அதிரடியாக கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரபல போதை பொருள் வியாபாரிகள் இருவரை இன்று (24) பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

Advertisement

இவார்களிடமிருந்து 13 இலட்சம் ரூபா பணம்,கெரோயின்-5கிராம் 750 மில்லி கிராம்,5கிராம் 670 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருள் மற்றும் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பெண் வியாபாரி 40 வயதுடையவர் என்றும் அவர் நீண்டகாலமாக வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தபோது பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதி மன்ற நவடிக்கையின் பின்னர் விடுதலையாகியிருந்தார்.

இருந்தபோதிலும் அவர் தனது வியாபர நடவடிக்கையினை பொலநறுவை வீதி நாவலடி பகுதிக்கு இடம்மாற்றி மேற்கொண்டு வந்த நிலயில் பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பேரில் அவர் அதே இடத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.

Advertisement

இதேபோன்று மற்றைய நபர் மாவடிச்சேனை வாழைச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்கி பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததோடு போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததாக பொலிசாhர் தொரிவித்தனர்.

மேற்படி கைது நடவடிக்கையானது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.ஆர்.பண்டார ஆலோசனையின் பேரில் ஊழல் ஒளிப்பு அதிகாரி கே.எஸ்.பி. அசங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபராத்தில் ஈடுபட்டு வந்த நபர்கள் இவர்களாகும்.

இவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு ஆர்பாட்டங்களை நடாத்தி வந்திருந்தனர்.

ஆனால் பொலிசார் இவர்களை கைது செய்வதில் இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில் இன்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம் பெற்றதுடன் இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக பிரதேச மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version