சினிமா

மணிகண்டனின் அடுத்த கூட்டணி அமைக்கும் இயக்குநர்…! யார் தெரியுமா? வெளியான அப்டேட்..!

Published

on

மணிகண்டனின் அடுத்த கூட்டணி அமைக்கும் இயக்குநர்…! யார் தெரியுமா? வெளியான அப்டேட்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மணிகண்டனும்  ஒருவர்.  இவர் நடிப்பில்  வெளியான  குட் நைட், லவ்வர்  மற்றும்குடும்பஸ்தன்  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும்  வசூல் ரீதியிலும் சாதனை படைத்து இருந்தது.  இந்த நிலையில்  இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அவர்களுடன் கூட்டணி  அமைக்க உள்ளதான தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. தற்போது “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய இவர் தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் STR 48 படத்தை இயக்குகி வருகின்றார்.  சிலம்பரசன் இரண்டு கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது . இந்நிலையில், லவ்வர் படத்தைப் பாராட்டி இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.மேலும் அந்த பதிவில் கண்ணன் ரவியின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருந்ததாக கூறி பதிவிட்டு இருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும். மேலும் “நிச்சயம் இப்படம் சிறப்பான வெற்றி பெறும்.” என்று கூறி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் பரவியது .மேலும் இந்த நிலையில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மணிகண்டனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version