இலங்கை

யாழில் மணல் கடத்தல் முயற்சி தோல்வி ; பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு

Published

on

யாழில் மணல் கடத்தல் முயற்சி தோல்வி ; பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு

யாழ்ப்பாண பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனத்திற்கு பொலிஸார் ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்துள்ளனர்.

கிளிநொச்சி பளை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினை சாவகச்சேரி பொலிஸார் கனகம்புளியடி சந்தி பகுதியில் வழி மறுத்துள்ளனர்.

Advertisement

அதன் போது டிப்பர் வாகனத்தினை நிறுத்தாது , அதன் சாரதி டிப்பர் வாகனத்துடன் தப்பியோடியுள்ளார்.

அதனை துரத்தி சென்ற பொலிஸார் டிப்பர் வாகன சில்லுகளுக்கு ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர்.

ஆணிகட்டைகள் டிப்பர் சில்லுக்குள் அகப்பட்டமையால் டிப்பர் வாகனத்தின் நான்கு சில்லுகளும் காற்று போன நிலையில், அதனை மேற்கொண்டு செலுத்த முடியாமல் போனமையால், டிப்பரை வீதியில் விட்டு விட்டு, சாரதியும் உதவியாளரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

Advertisement

அதன் பின்னர் பலத்த சிரமங்களின் மத்தியில் டிப்பர் வாகனத்தினை மீட்டு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

தப்பியோடிய நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version