சினிமா

விஜய் சொன்ன ரகசியத்தை!!பொதுவெளியில் உடைத்த நடிகை மமிதா!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Published

on

விஜய் சொன்ன ரகசியத்தை!!பொதுவெளியில் உடைத்த நடிகை மமிதா!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோ உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.ஜன நாயகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள மமிதா பைஜூ, அயர்லாந்தில் நடைபெற்ற மலையாள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.அதில், ஜனநாயகன் படம் தான் உங்கள் கடைசி படமா என்று ஷூட்டிங்கில் கேட்டேன். அதற்கு விஜய், தெரியவில்லை, தேர்தல் முடிந்ததும் முடிவுகள் வந்தப்பின் பார்க்கலாம் என்று கூறினார்.மமிதா, இதை கூறியதை அடுத்து நெட்டிசன்கள் பலர், உன்னை நம்பி ஒரு விஷயத்தை சொன்னதை போட்டு உடைச்சிட்டியே என்று கலாய்த்து வருகிறார்கள். மேலும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டைமாறனும் தன் பங்கிற்கு, என்ன குமுதா இதெல்லாம் என்று ஒரு பதிவினை போட்டு மமிதாவை கலாய்த்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version