இலங்கை

உண்டியலில் போட்டது அம்மனுக்கே சொந்தம்; கோடிக்கணக்கான சொத்தை இழந்த குடும்பம்

Published

on

உண்டியலில் போட்டது அம்மனுக்கே சொந்தம்; கோடிக்கணக்கான சொத்தை இழந்த குடும்பம்

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் ஒருவர் இலங்கை ரூபாயில்  10 கோடிக்கும் அதிக மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்டுள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலை, கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஜயன் (65) மற்றும் கஸ்தூரி. இதில் விஜயன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.

Advertisement

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஜயன் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இந்நிலையில், கடந்த மே 2-ம் திகதி விஜயன் படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது 10 கோடிக்கும் அதிக  மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்டு சென்றார்.

Advertisement

இந்த கோயிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று நடைபெற இருந்தது. அப்போது அங்கு வந்த விஜயன் உண்டியலில் 10 கோடிக்கும் அதிக  மதிப்புடைய பத்திரம் உள்ளது. அதனை கோயில் பெயரில் மாற்றி எழுதுங்கள் எனக் கூறினார்.

இதனை கேட்டு கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்து சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version