சினிமா
“பறந்து போ” படம் என் இதயத்தை தொட்டுவிட்டது! இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் உருக்கமான பாராட்டு
“பறந்து போ” படம் என் இதயத்தை தொட்டுவிட்டது! இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் உருக்கமான பாராட்டு
தமிழ் சினிமா உலகத்தில் எப்போதுமே தனித்துவமான படைப்புகளை உருவாக்கும் இயக்குநர்களில் ஒருவர் ராம். அவருடைய புதிய திரைப்படமான “பறந்து போ” தற்போது திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கு முன்னதாகவே இந்தப் படம் குறித்து சினிமா வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.அதனை மேலும் உறுதியூட்டும் வகையில், சமீபத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், “பறந்து போ” திரைப்படம் குறித்து உணர்ச்சிபூர்வமாக கதைத்த பாராட்டுச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.“பறந்து போ” படத்தை திரையரங்கில் முன்னோட்டமாகக் கண்டு ரசித்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். என் இதயம் நிறைந்துவிட்டது. நகைச்சுவை உணர்வுகளை அருமையாக கையாண்டுள்ளார். மனதில் நிற்கும் இப்படிப்பட்ட படத்தை திரையரங்குகளில் தவற விட்டுவிடாதீர்கள்.” எனக் குறிப்பிட்டார்.“பறந்து போ” திரைப்படம் 2024 ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழ்நிலையில் அபிஷன் கூறிய கருத்துகளால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.