சினிமா

போலீஸிடம் சிக்கிய கிருஷ்ணா..! கொடுத்த வாக்குமூலத்தால் குழப்பம்..நடந்தது என்ன ?

Published

on

Loading

போலீஸிடம் சிக்கிய கிருஷ்ணா..! கொடுத்த வாக்குமூலத்தால் குழப்பம்..நடந்தது என்ன ?

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு பிறகு தற்போது நடிகர் கிருஷ்ணா சிக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த இவர் இன்று போலீசாரால் பிடிபட்டார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.விசாரணையின் போது கிருஷ்ணா தனது வாக்குமூலத்தில் “நான் எந்த போதைப்பொருளும் வாங்கவில்லை பயன்படுத்தவும் இல்லை” எனவும் தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் இத்தகைய பொருட்களை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் இதயத்துடிப்பு அதிகரிப்பு பிரச்சனையால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியதாக தகவல்.இருப்பினும் போதைப்பொருள் வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் தான் தனது நெருக்கமான நண்பர் என்பதை கூறியுள்ளார் . இந்நிலையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ய போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பரிசோதனை முடிவுகள் வழக்கின் போக்கை தீர்மானிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version