இலங்கை

யாழில் இரு இளம் குடும்பஸ்தர்களின் விபரீத முடிவு ; நடந்தது என்ன?

Published

on

யாழில் இரு இளம் குடும்பஸ்தர்களின் விபரீத முடிவு ; நடந்தது என்ன?

  யாழில் குடும்ப தகராரில் இருவேறு பிரதேசங்களில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்துள்ளார்.

Advertisement

உயிரிழந்தவர் கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இவர் கடந்த 22ஆம் திகதி அதிகாலை மனைவியின் தந்தையின் வீட்டுக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

Advertisement

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் தவறான முடிவெடுத்து மற்றுமொரு இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இவர் 23ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version