சினிமா

விண்வெளிக்கு பறப்பதற்கு முன் ரஹ்மானின் பாடல் கேட்ட வீரர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Published

on

விண்வெளிக்கு பறப்பதற்கு முன் ரஹ்மானின் பாடல் கேட்ட வீரர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

இந்திய விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா தற்போது ஒரு விடயத்தால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதாவது, சுபான்ஷு விண்வெளிக்கு புறப்படுவதற்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிரபலமான ஒரு பாடலை கேட்பதாக கூறிய தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான Swades திரைப்படத்தில் இடம்பெற்ற “யூன் ஹி சலச் சல்” என்ற பாடலை ரஹ்மான் சிறப்பாக இசையமைத்திருந்தார். அத்துடன் இந்தப் பாடலை உதித் நாராயணும், ஹரிஹரனும் இணைந்து பாடியிருந்தனர்.இந்த பாடலைத் தேர்வு செய்து விண்வெளி பயணத்திற்கு முன் நிம்மதியாகக் கேட்டு ரிலாக்ஸ் ஆனார் சுபான்ஷு சுக்லா. அந்த தருணத்தை அவரது பயிற்சியாளர் மற்றும் குழுவினர் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததுடன், தற்போது அந்த தகவல்கள் வைரலாகி வருகின்றது. இந்த தகவல் வைரலானதும், ரஹ்மான் ரசிகர்கள் இணையத்தளத்தில் உணர்வுபூர்வமான பதிவுகளை அளிக்க ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version