சினிமா

ஆசன வாய் அருகே அபரேஷன்!! முரட்டு வில்லன் பொன்னம்பலத்திம் தற்போதைய மோசமான நிலை…

Published

on

ஆசன வாய் அருகே அபரேஷன்!! முரட்டு வில்லன் பொன்னம்பலத்திம் தற்போதைய மோசமான நிலை…

ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமாகி அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஆரம்பித்து முரட்டு வில்லனாக திகழ்ந்து வந்தவர் தான் பொன்னம்பலம்.முத்து படத்தில் ரஜினிகாந்தையே புரட்டி போட்டு அடித்த பொன்னம்பலம், தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் மருத்துவ செலவுகளுக்கே பணக்கஷ்டத்தில் அவதிப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.இச்செய்தியை கேட்ட தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஓடோடி வந்து அவரை பார்த்து நலம் விசாரித்து உதவிகளை செய்தார். ஐசியூவில் சிகிச்சை பெற்று நார்மல் வார்ட்டுக்கு மாற்றப்பட்டப்பின், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் இருந்தார்.கடந்த 5 ஆண்டுகள் உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருவதாக பொன்னம்பலம் ஆடியோவில் தெரிவித்திருந்தார்.சமீபத்தில் ஒரு வீடியோவில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலம், அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் ஆசன வாய் அருகே அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தெரிவித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.தொடர்ந்து பல மாதங்கள் உடல் நலம் முடியாமல் படுத்த படுக்கையில் இருந்து வரும் பொன்னம்பலம், எமர்ஜென்சி வார்டில் இருந்து நார்மல் வார்ட்டுக்கு மாறிவிட்டதாகவும் இன்னும் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்று தனக்காக பிராத்தனை செய்தவர்களுக்கு நன்றி என்றும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version