சினிமா

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் அவர் எங்க ஆளு!முருகன் மாநாடு குறித்து பேசிய சத்யராஜ் !

Published

on

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் அவர் எங்க ஆளு!முருகன் மாநாடு குறித்து பேசிய சத்யராஜ் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் 90S கால காட்டத்தில் கதாநாயகனவும்  வலம் வந்தவர் சத்யராஜ். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . சமீபத்தில் முருகன் மாநாடு நடைபெற்றது . அதில் பல பிரபலங்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர். இந்த மாநாடு குறித்தது  நடிகர் சத்யராஜ் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்ற்ன .நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது ” கோயிலுக்கு போவோம் பிரசாதம் வாங்கி சாப்பிடுவோம் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று கூறினார். மேலும் தன்னுடைய மச்சான் கூட ஒரு கோயில்ல தர்மா கர்த்தாவாக இருக்கின்றார் எனவும்  அங்க பொங்கல் வடை எல்லாம்  நன்றாக இருக்கும் . எல்லாவற்றையும் நல்ல வாங்கி சாப்பிட்டு வீட்டு வெளியே வந்து ஜாதி மறுப்பு ,தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் அதனால்  எங்களை ஏமாற்றுவதாக நிலைத்து நீங்கள் எங்களிடம் ஏமாறுகின்றீர்கள்  என்று கூறியிருந்தார் .தொடர்ந்து கூறும் போது முருகனுக்கு விழா எடுத்து இவர்களை ஏமாற்றி விட்டோம் என்று நினைத்து கொண்டு இருப்பீர்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அப்படி இருந்தாலும் அவர் எங்க ஆளு . அவர் சைலன்டா இருந்து கொண்டே  ஆப்பு வைத்து விடுவார். நீங்கள்  அவர் பெயரில் எங்களுக்கு ஆப்பு வைக்கலாம் என்று பார்க்கின்றீர்கள்ஆனால் அவர் உங்களுக்கு ஆப்பு வைத்து விடுவார் . என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர் . 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version