இலங்கை
யாழில் கால் தவறி கிணற்றில் விழுந்து சிறுவன் பலி
யாழில் கால் தவறி கிணற்றில் விழுந்து சிறுவன் பலி
யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
கிணற்றில் மீன் பிடிக்க முயன்ற போது அவர் கால் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவரே உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.