வணிகம்
Gold Rate Today, 24 June: ஆறுதல் தரும் தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஹாப்பி!
Gold Rate Today, 24 June: ஆறுதல் தரும் தங்கம் விலை… இல்லத்தரசிகள் ஹாப்பி!
Gold and Silver Price Today in Chennai: ஈரான் – இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் சூழலிலும், தங்கத்தின் விலை குறைந்துள்ளது பொதுமக்கள் இடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் விற்பனையாகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம். Gold Rate: 24 கேரட் தூய தங்கம்: நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், 24 கேரட் தங்கம் நேற்று இருந்த அதே நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 9,895-க்கு, 8 கிராம் ரூ. 79,160 விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம்: ஆபரணத் தங்கமான 22 கேரட் தங்கமும் நேற்று போல அதே நிலவரத்தில் ஒரு கிராம் ரூ. 9,070 எனவும், எட்டு கிராம் ரூ. 72,560 என்றும் விற்பனை ஆகிறது. வெள்ளியை பொறுத்த வரை இன்று ஒரு கிராம் ரூ. 118-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை நேற்றும் இதே விலையாக தான் இருந்தது. அதிக அளவில் தங்கம் விலை சரிவை சந்திக்கவில்லை என்றாலும், இது தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இடையே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.