சினிமா

உடல் எடையை குறைத்து ஒல்லியாகி மாறிய தமன்னா.. வைரலாகும் வீடியோ

Published

on

உடல் எடையை குறைத்து ஒல்லியாகி மாறிய தமன்னா.. வைரலாகும் வீடியோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கல்லூரி, சுறா, படிக்காதவன், வீரம், அயன் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.தென்னிந்திய அளவில் வலம் வந்த தமன்னாவிற்கு பாலிவுட்டிலும் தனக்கான இடத்தை உருவாக்கினார். ஹீரோயினாக படங்களில் நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாளா பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் தங்களது காதலை சமீபத்தில் முறித்துக்கொண்டனர். இவர்களுடைய பிரேக்அப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை.இந்த நிலையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version